நல்லூரில் நாளை நாவலர் பெருமான் நினைவு வைபவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலர் பெருமானின் நினைவு வைபவம் அவரது குருபூசை நன்னாளான நாளை திங்கட்கிழமை (04.12.2023) காலை-10 மணி முதல் நல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் துர்க்காபுரம் மகளிர் இல்ல மாணவிகளின் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வு மற்றும் பேச்சு நடைபெறும்.

அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். சி.சிவலிங்கராஜா "நாவலர் பெருமானால் காக்கப்பட்ட சுதேசிய சைவத்தமிழ்ப் பண்பாடு" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார். அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூசை (அன்னதானம்) இடம்பெறும். 

(செ.ரவிசாந்)