சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் பல வகைகளிலும் பாதிக்கப்பட்ட மக்களை இனம் கண்டு தொடர்ச்சியாகப் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக கல்விப் புலம் சார்ந்தும் ஏராளமான உதவிகளை வழங்கி வருகிறது.
அந்தவகையில் முல்லைத்தீவு வற்றாப்பளைப் பகுதியைச் சேர்ந்த ஊவாப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்தும் பொருளாதார நிலை காரணமாக கற்றலை இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்த மாணவியொருவரிற்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (04.12.2023) முதற்கட்டமாக 50,000 ரூபா நிதி வழங்கப்பட்டது. கற்றலுக்குத் தேவையான உபகரணங்கள் கொள்வனவுக்காகவே இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மாணவிக்கு மாதாந்தம் ஒருதொகைக் கல்வி ஊக்குவிப்பு நிதியை வழங்குவதற்கும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் முன்வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(செ.ரவிசாந்)