தெல்லிப்பழை வீணாக்கடவை காசி விநாயகர் ஆலயத்தில் லட்சார்ச்சனை

தெல்லிப்பழை வீணாக்கடவை காசிவிநாயகர் ஆலய விநாயகர் விரதமும் லட்சார்ச்சனையும் கடந்த மாதம்-28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியது. 

இந்தமாதம்-18 ஆம் திகதி திங்கட்கிழமை  வரை இவ் ஆலய விநாயகர் விரதமும் லட்சார்ச்சனையும் இடம்பெறவுள்ளது.

மேற்படி காலப் பகுதியில் தினமும் காலை-08.30 மணிக்கு அபிஷேகம், காலை-09.30 மணிக்கு விசேட பூசை, காலை-10 மணிக்கு லட்சார்ச்சனையும் ஹோமமும் இடம்பெறும். அடுத்தமாதம்-17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை லட்சார்ச்சனை பூர்த்தி, மாலை-04 மணிக்கு கஜமுகாசூர சங்காரமும், மறுநாள் திங்கட்கிழமை காலை-08.30 மணிக்குச் சங்காபிஷேகமும் நடைபெறும்.