பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான 16 நாள் செயற்திட்டத்தினை முன்னிட்டு மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் கோப்பாய்ப் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும் ஆலோசனை சேவை மற்றும் ஏனைய சேவைகள் தொடர்பான நடமாடும் சேவை நாளை வெள்ளிக்கிழமை (08.12.2023) காலை-09 மணி முதல் மாலை-03.30 மணி வரை கோப்பாய்ப் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நடமாடும் சேவையில் காலங்கடந்த பிறப்புப் பதிவு, காலங்கடந்த இறப்புப் பதிவு, திருமணப் பதிவு, தேசிய அடையாள அட்டைச் சேவைகளும் மற்றும் ஆரோக்கியச் சிகிச்சை, இளையோர்களுக்கான விழிப்புணர்வு ஆகியனவும் இடம்பெறவுள்ளன.