தெல்லிப்பழையில் நாளை பண்பாட்டுப் பெருவிழா

வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், தெல்லிப்பழைப் பிரதேச செயலகமும், பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை (08.12.2023) பிற்பகல்-02 மணி முதல் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் ச.சிவஸ்ரீ தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

மேற்படி விழாவில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும், வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ் சிறப்பு விருந்தினராகவும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் அதிபர் தில்லையம்பலம் வரதன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

(செ.ரவிசாந்)