நோயாளர்களின் நலன் பேணலைக் கருத்திற் கொண்டு யாழில் புதிய பொது அமைப்பு அங்குரார்ப்பணம்

யாழ்.மாவட்டத்தில் நோயாளர்களின் உரிமைகள் மற்றும் நலன் பேணலைக் கருத்திற் கொண்டு சமூக அக்கறை கொண்ட நண்பர்கள் பலரும் ஒன்றிணைந்து புதிய பொது அமைப்பொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.    

மேற்படி பொது அமைப்பிற்கான புதிய நிர்வாகக் குழுத் தெரிவும், அங்குரார்ப்பணமும் நிகழ்வு நாளை சனிக்கிழமை(09.12.2023) மாலை-03 மணியளவில் யாழ் நாச்சிமார் கோயிலடி ராஜா கிறீம் ஹவுஸ் ஹம்சியா மஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

சமூக நோக்கம் கொண்ட ஆர்வமுள்ள அனைவரையும் குறித்த நிகழ்வில் பங்கேற்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள்அழைப்பு விடுத்துள்ளனர். 

(செ.ரவிசாந்)