'ஈழத்துச் சபரிமலை' என அழைக்கப்படும் கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த மஹோற்சவம் கார்த்திகை உத்தர நாளான கடந்த புதன்கிழமை(06.12.2023) காலை-10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
கோண்டாவில் ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலயத்தில் காலை-08.30 மணியளவில் கொடிச் சீலை வைக்கப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து முதன்முறையாகத் தமிழ்மக்களின் பாரம்பரிய வாகனமான மாட்டு வண்டியில் கொடிச்சீலை மேற்படி ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விசேட ஹோம வழிபாடுகள் நடைபெற்றது. வசந்தமண்டப பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கொடியேற்ற உற்சவம் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.
இதேவேளை, தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ் ஆலய மஹோற்சவம் காலை, மாலை உற்சவங்களாக நடைபெற்று வருகிறது. எதிர்வரும்-13 ஆம் திகதி புதன்கிழமை இரவு-07 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-10 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள்-15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்-10.30 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் இரவு-07 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.