யாழ்.மாதகல் நுணசை வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழா நாளை புதன்கிழமை(13.12.2023) பிற்பகல்-01 மணியளவில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் பொன்னம்பலம் ஆறுமுகரஞ்சன் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் நடனத் துறை ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஸ்ரீ. கண்ணதாசன் பிரதம விருந்தினராகவும், நுணசை முருகமூர்த்தி ஆலய தர்மகர்த்தா பா.புருசோத்தமன், பாடசாலையின் பழைய மாணவர் வே.பூ.அன்பழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.