வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேற்படி கல்லூரிச் சமூகத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை புதன்கிழமை(13.12.2023) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01.30 மணி வரை மேற்படி பாடசாலையின் ஒட்லி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.  

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் கல்லூரியின் மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு உயிர்காக்கும் இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர். 

(செ.ரவிசாந்)