ஆதன வரியை ஜனவரி-31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு அறிவிப்பு

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் உரும்பிராய் உப அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் ஆதனங்களிற்கான ஆதன வரியை(சோலை வரியை) இந்த வருடம் ஜனவரி மாதம்-31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உரும்பிராய் உப அலுவலகப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.  

ஜனவரி மாதம்-31 ஆம் திகதிக்கு முன்னர் ஆதன வரி செலுத்துபவர்களிற்கு சோலைவரிக் கட்டணத்திலிருந்து பத்து வீதக் கழிவு வழங்கப்படும். எனவே, அனைவரும் ஆதன வரியைச் செலுத்திச் சபையின் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.  

வரி செலுத்த வருகை தரும் போது தங்கள் ஆதனத்திற்கு ஏற்கனவே செலுத்திய சோலைவரிப் பற்றுச் சீட்டு அல்லது தங்கள் ஆதனத்தின் அருகிலுள்ள ஆதனத்திற்குச் சோலை வரி செலுத்திய பற்றுச் சீட்டை எடுத்து வருவது தங்கள் ஆதனத்தை இனம் காண்பதற்கு இலகுவாக அமையும் எனவும்  அவர் மேலும் குறிப்ப்பிட்டுள்ளார்.