குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் வருடாந்த திருவாசக முற்றோதல்

குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் ஏற்பாட்டில் வருடாந்த திருவாசக முற்றோதல் நிகழ்வு நாளை மறுதினம் சனிக்கிழமை(13.01.2024) நடைபெறவுள்ளது.

காலை-06 மணியளவில் விசேட பூசை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து திருவாசக முற்றோதல் நிகழ்வு ஆரம்பமாகி நண்பகல்-12 மணி வரை தொடர்ச்சியாக இடம்பெறும். அதனைத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுமென மேற்படி ஆச்சிரம நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருவாசக முற்றோதல் நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் அன்னதான நிகழ்விலும் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆச்சிரம நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செ.ரவிசாந்)