சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை(12.01.2024) காலை-10 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் தென்னிந்தியத் தொலைக்காட்சிப் புகழ் செந்தமிழ்க் கலாநிதி பி.சுவாமிநாதன் கலந்து கொண்டு "கந்தன் மகிமை" எனும் தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார்.