வரவேற்புரையினை கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான யோ. நெவில்குமார் அவர்களும், வெளியீட்டுரையினை நாடக கலைஞரும் விமர்சகருமான அ. சத்தியானந்தன் நிகழ்த்தினார்.
நூலினை பேராசிரியர் ரகுராம் வெளியிட்டு வைக்க மாணவர் ஒன்றிய தலைவர் துவாரகன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்தும் சிறப்பு பிரதிகளை பேராசிரியர் கணேசலிங்கம் வழங்கி வைத்தார்.
தொடர்ந்து கலாநிதி ரகுராம் அவர்களின் பிரதம விருந்தினர் உரையும், கலாநிதி கே.ரி கணேசலிங்கம் அவர்களின் சிறப்பு விருந்தினர் உரையும் இடம்பெற்றது.
நூல் தொடர்பிலான விமர்சனவுரையினை யாழ் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தி.செல்வமனோகரன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து நூலாசிரியரும், எழுத்தாளருமான தீபச்செல்வனின் ஏற்புரையினை தொடர்ந்து நன்றியுரையினை கலைப்பீட மாணவர் ஒன்றிய செயலாளரான சி.கிருஷ்ணராஜ் வழங்கினார்.