ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் ஆலயத்தில் நாளை திருவாசக முற்றோதல்

ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் ஆலயத்தில் நாளை புதன்கிழமை(10.01.2024) வருடாந்த திருவாசக முற்றோதல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

நாளை காலை-07 மணியளவில் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கலாபூஷணம் இ.சரவணபவன் தலைமையில் திருவாசக முற்றோதல் நிகழ்வு ஆரம்பமாகிப் பிற்பகல்-01 மணி வரை இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.