யாழ்.பல்கலைக்கழகத்தில் நாளை பயங்கரவாதி நாவல் நூல் அறிமுக விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈழத்து எழுத்தாளரும்,  மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளருமான தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவல் நூலின் அறிமுகவிழா நாளை புதன்கிழமை(10.01.2024) பிற்பகல்-01 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கே.துவாரகன் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைத்துறைப் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி. சி.ரகுராம் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல்துறைத் தலைவர் கலாநிதி. கே.ரி.கணேசலிங்கம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாடகக் கலைஞரும், விமர்சகருமான அ.சத்தியானந்தன் நூலின் வெளியீட்டுரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறையின் இந்துக் கற்கைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.தி.செல்வமனோகரன் விமர்சனவுரையையும் ஆற்றவுள்ளனர். நூலாசிரியர் தீபச்செல்வன் ஏற்புரையை நிகழ்த்துவார். 

(செ.ரவிசாந்)