குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் பதினொராவது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை (28.01.2024) மேற்படி ஆச்சிரமத்தில் சிறப்புப் பொங்கல் மற்றும் பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.
நாளை காலை-10 மணிக்கு மேற்படி ஆச்சிரம முன்றலில் சிறப்புப் பொங்கல் வழிபாடுகள் நடைபெறவுள்ளதுடன் தொடர்ந்து சிறப்புப் பூசை வழிபாடுகளும் இடம்பெறுமென ஆச்சிரம நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.