உடுவில் பிரதேச செயலகத்திற்குப் புதிய பிரதேச செயலாளர்

உடுவில் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராகப் பாலசுந்தரம் ஜெயகரன் பொறுப்பேற்றுள்ளார்.

புதிய பிரதேச செயலாளர் தனது கடமைகளை உத்தியோகபூர்வ மாகப் பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை (24.01.2024) காலை மேற்படி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.      

இதேவேளை, உடுவில் பிரதேச செயலகத்தில் கடந்த-28.02.2020 முதல் 23.01.2024 வரையான காலப் பகுதியில் சிறப்பாகச் சேவையாற்றிய தவச்செல்வம் முகுந்தன் கரைச்சிப் பிரதேச செயலாளராக இடம்மாற்றம் பெற்றுச் சென்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.