யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று திங்கட்கிழமை(08.01.2024) பரவலாக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
குறித்த மழைவீழ்ச்சி இடையிடையே பதிவாகியதுடன் அவ்வப்போது தொடர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. அத்துடன் குளிரான காலநிலையும் பதிவாகியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.