கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அரும் சேவை: சிறப்புற்ற கல்விசாராப் பணியாளரின் மணி விழா

கோப்பாய் மற்றும் பலாலி ஆசிரியர் கலாசாலைகளில் நாற்பது வருடங்கள் கற்பித்தல் சாரா பணியாளராகச் சேவையாற்றிய சீவரத்தினம் தங்கவேலின் பணியோய்வை முன்னிட்டு  மணிவிழா இன்று திங்கட்கிழமை (08.01.2024) கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின்  ரதிலட்சுமி மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் வதனி கேதாரநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் மற்றும்  யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி கலாநிதி.சுப்ரமணியம் பரமானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரைகளை நிகழ்த்தினர்.