மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் தேர் பவனி நாளை

இணுவில் மருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய ஹனுமத் ஜெயந்தி லட்சார்ச்சனைப் பெருவிழாவின் தேர் பவனி நாளை செவ்வாய்க்கிழமை (09.01.2024) காலை சிறப்பாக இடம்பெறவுள்ளது. 

நாளை காலை-07 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நாளை காலை-09 மணியளவில் தேர்பவனியும் இடம்பெறுமென மேற்படி ஆலய ஆதீனகர்த்தா தெரிவித்துள்ளார்.