மாவிட்டபுரம் கந்தன் லட்சார்ச்சனை உற்சவம் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் லட்சார்ச்சனை உற்சவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (16.01.2024) ஆரம்பமாகியது. எதிர்வரும்-25 ஆம் திகதி வியாழக்கிழமை வரை லட்சார்ச்சனை உற்சவம் தொடர்ந்தும் பத்துத் தினங்களுக்கு இடம்பெறவுள்ளது. 

இவ் ஆலய லட்சார்ச்சனை உற்சவ காலப் பகுதியில் தினமும் காலை-06.30 மணியளவில் உஷக்காலப் பூசை, காலை-07 மணியளவில் 108 சங்காபிஷேகம், காலை-08.30 மணியளவில் காலைச்சந்திப் பூசை, காலை-09.30 மணியளவில் லட்சார்ச்சனை, நண்பகல்-12.30 மணியளவில் உச்சிக்காலப் பூசை, தொடர்ந்து மகேஸ்வரபூசை (அன்னதானம்) என்பன நடைபெறும். மாலை-03 மணியளவில் 108 சங்காபிஷேகம், மாலை-04.30 மணியளவில் சாயரட்சைப் பூசை, மாலை-05.30 மணியளவில் இரண்டாம் காலப் பூசை, லட்சார்ச்சனை, இரவு-07.00 மணியளவில் அர்த்தசாமப் பூசை, அதனைத் தொடர்ந்து திருவருட் பிரசாதம் வழங்குதல் என்பன இடம்பெறுமென  மாவை ஆதீன கர்த்தா மகாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள் தெரிவித்துள்ளார். 

(செ.ரவிசாந்)