யாழ்.மாவட்டச் செயலகத்தில் சிறப்புற்ற வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு


யாழ்.மாவட்டச் செயலக வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (16.01.2024) காலை யாழ்.மாவட்டச் செயலக முன்றலில் சிறப்புற இடம்பெற்றது.

யாழ்.மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத் தலைவரும், பிரதித் திட்டமிடல் பணிப்பாளருமான இ.சுரேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மாவட்டச் செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.