இணுவில் ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (04.02.2024) காலை-09 மணி முதல் பிற்பகல்-12.30 மணி வரை சத்தியசாயி சேவா நிறுவனங்களின் வடபிராந்திய இணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் ஆன்மீக சாதனை வழிபாடு இடம்பெறவுள்ளது.
இதன்போது ஓம்காரம், வெளிவீதியில் நகர சங்கீர்த்தனம் இசைத்தல், விநாயகர் வணக்கம் திருநீற்றுப் பதிகம் இசைத்தலும், விபூதி அணிதலும், பஜனைப் பாடல்கள் இசைத்தல், ஞானலிங்கேச்சுரப் பெருமானுக்கு சிவநாமத்தை ஓதியவாறு அபிடேகம் செய்தல், சிவபுராணம் ஓதுதல், சிவலிங்க அர்ச்சனை, தினசரி வாழ்வில் நாம ஜெபம் எனும் தலைப்பிலான உரை, நமசிவாயப் பதிகம் ஓதுதல், திருவாசகம், திருமந்திரம், சிவயோகசுவாமிகள் அருளிய பாடல்கள் ஓதுதல் என்பனவும் நடைபெறும்.