ஏழாலையில் நாளை ஓய்வுநிலை அதிபர் நல்லகுமாரின் மணிவிழா

யாழ்.ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையில் நீண்டகாலம் அதிபராக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி ஓய்வுபெற்ற சிவசாமி நல்லகுமாரின் மணிவிழா நாளை வியாழக்கிழமை(08.02.2024) பிற்பகல்-02.30 மணி முதல் மேற்படி பாடசாலை மண்டபத்தில் அதிபர் க.சந்திரலதா தலைமையில் இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வில் வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரன்ஸ் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் க.ஜெ.பிறட்லி சிறப்பு விருந்தினராகவும்,  வலிகாமம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.முரளிதரன், உடுவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோ.இராமநாதன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.