நயினாதீவு படகுத்துறை ஆலடி ஞானவைரவருக்கு மகா கும்பாபிஷேகம்

நயினாதீவு படகுத்துறை ஆலடி ஞானவைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை(11.02.2024) முற்பகல்-10.30 மணி முதல் நண்பகல்-12 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது.

மகா கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(09.02.2024) காலை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமானது. இன்று சனிக்கிழமை(10.02.2024) காலை-09 மணி முதல்  மாலை-05 மணி வரை அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவமும் இடம்பெறுமென மேற்படி ஆலயத் திருப்பணிக் குழு தெரிவித்துள்ளது.