குப்பிழானிலும், பருத்தித்துறையிலும் நாளை இரத்ததான முகாம்


குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் 77 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேற்படி சனசமூக நிலைய நிர்வாகம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை  ஞாயிற்றுக்கிழமை(11.02.2024) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை விக்கினேஸ்வரா சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தக் குருதிக் கொடை முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர். 

இரத்ததானம் தொடர்பான முன்னறிவிப்பு நடவடிக்கை இன்று மாலை குப்பிழான் கிராமம் முழுவதும் சனசமூக நிலைய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.  

இதேவேளை, பருத்தித்துறை ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலைய நிர்வாகக் குழுவின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(11.02.2024) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-12.30 மணி வரை பருத்தித்துறையில் அமைந்துள்ள மேற்படி நிலையத்தில் நடைபெறவுள்ளது.      

(செ.ரவிசாந்)