யாழில் நாளை பல இடங்களில் மின்தடை!


மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(11.02.2024) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.சங்கானை, சங்கானை சந்தை, நிச்சாமம், உடுவில், உடுவில் மகளிர் கல்லூரி, சங்குவேலி, தோட்டக் கலை பிறைவேற் லிமிற்ரெட், அரசடிச் சந்தி, வல்லை வீதி, சாவகச்சேரி ஆதார மருத்துவமனை, சாவகச்சேரி நீதிமன்ற வளாகம், சாவகச்சேரிப் பிரதேச செயலகம், சாவகச்சேரி நகரம், அரசடி, மருதடி, ஆசிரியர் வீதி, சாவகச்சேரி- டச்சு வீதி, கண்டுவில், கச்சாய் வீதி, கல்வயல் துர்க்கை அம்மன் கோயில், சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோயில், நுணாவில், நுணாவில் வைரவர் கோவில் பிரதேசம், பெருங்குளம் சந்தி, தபால் அலுவலகம் சந்தி, புகையிரத நிலைய வீதி ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.