குப்பிழான் தைலங்கடவை ஞானவைரவர் ஆலயத்தில் கும்பாபிஷேகதின சங்காபிஷேகம்

குப்பிழான் தெற்கு தைலங்கடவை ஞானவைரவர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக தின சங்காபிஷேகம் நாளை வியாழக்கிழமை (08.02.2024) முற்பகல்-10.30 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி இடம்பெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

சங்காபிஷேக கிரியைகள் பிரம்மஸ்ரீ பா.தெய்வேந்திரசர்மா தலைமையில் நடைபெறும்.  

இதேவேளை, இவ் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மூன்றாவது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டே சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.