யாழ்.நெடுந்தீவுக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம்-23 ஆம் திகதி கைதான ஆறு இந்தியாவின் தமிழக மீனவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைதான ஆறு இந்திய மீனவர்களும் இன்று செவ்வாய்க்கிழமை (06.02.2024) மீண்டும் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது ஆறு இந்தியாவின் தமிழக மீனவர்களும் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகினை அரசுடைமையாக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.