நயினாதீவில் ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகளின் 75 ஆவது ஆண்டு குருபூசை

நயினைச் சித்தர் தவத்திரு ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகளின் 75 ஆவது ஆண்டு சமாதி நிறைவுதின குருபூசை நிகழ்வு நாளை புதன்கிழமை(07.02.2024) காலை நயினாதீவில் அமைந்துள்ள  சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

குருபூசையைத் தொடர்ந்து நயினை ஞான முத்து நூல் வெளியீடும், அருள் ஒளி நிலையத்  தொண்டர் சபையினரால் முத்துக்குமார நாதம் இசை இறுவெட்டு வெளியீடும் இடம்பெறும். சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய நமச்சிவாய மாலை,  நாகபூசணி அந்தாதி, நாகேஸ்வரி தோத்திர மாலை ஆகியன மூன்று பாகங்களாகப் பாடப் பெற்று வெளியிடப்படவுள்ளது.

இந் நிகழ்வில் பங்குபற்றிக் குருவருளைப் பெற்றுய்யுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.