நல்லூர் கிழக்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம் ஆரம்பம்

நல்லூர் கிழக்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நாளை புதன்கிழமை(07.02.2024) முற்பகல்-11 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ் ஆலய அலங்கார உற்சவம் நடைபெறவுள்ளது.

இவ் ஆலய அலங்கார உற்சவத்தில் எதிர்வரும்-14 ஆம் திகதி புதன்கிழமை மாலை-07 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 15 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-07.30 மணியளவில் தேர்த் திருவிழாவும், மாசிப் பரணி நன்னாளான 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் தீர்த்தோற்சவமும், இரவு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறுமென மேற்படி ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.