கோண்டாவிலில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

ஜே-120 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் தென்மேற்குப் பகுதியில் இன்று திங்கட்கிழமை(05.02.2024) டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது.  

சுதேச மருத்துவத் திணைக்களத்தின் நல்லூர் சமூக மருத்துவ உத்தியோகத்தர் கயாலினி கலந்து கொண்டு டெங்கு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துரையை வழங்கினார்.

இந் நிகழ்வில் மேற்படி கிராம அலுவலர் பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


.