சுன்னாகம் பொதுநூலகத்தில் இலவச சித்திர வகுப்பு நாளை மீள ஆரம்பம்

உடுவில் கலாசார மத்திய நிலையம் சுன்னாகம் பொதுநூலகத்துடன் இணைந்து நடாத்தும் இலவச சித்திர வகுப்பு நாளை செவ்வாய்க்கிழமை (06.02.2024) மாலை-04 மணியளவில்  சுன்னாகம் பொதுநூலகத்தில் மீள ஆரம்பமாகவுள்ளது. 

மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் நோக்கில் ஐந்தாவது வருடமாக இவ் வகுப்பு ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

குறித்த வகுப்பில் தரம்-01 முதல் க.பொ.த உயர்தரம் வரையான உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாணவ- மாணவியர் அனைவரும் இணைந்து கொண்டு பயன்பெற முடியும்.