பாடசாலைகள் நாளை மீள ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டக் கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை(05.02.2024) மீள ஆரம்பமாகவுள்ளது.

உயர்தரப் பரீட்சை காரணமாக கடந்த டிசம்பர் மாதம்-23 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் மீளவும் பெப்ரவரி மாதம்-01 ஆம் திகதி பாடசாலைகள்  ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், சமூக வலைத் தளங்களில் உயர்தர விவசாய விஞ்ஞானப் பாட பரீட்சை வினாத்தாள் கசிந்ததையடுத்து வினாத்தாளை இரத்துச் செய்த பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் குறித்த பாடத்திற்கான பரீட்சையை கடந்த-01 ஆம் திகதி நடத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.