யாழ்.உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் தரம் -01 இல் புதிதாக இணைந்த 46 மாணவிகளுக்குச் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் மொத்தமாக 52,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இன்று வியாழக்கிழமை(22.02.2024) வழங்கப்பட்டது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு குறித்த கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.