சைவவித்தியா விருத்திச் சங்கத்தின் நூற்றாண்டு விழா நாளை வெள்ளிக்கிழமை(23.02.2024) இரு அமர்வுகளாக நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் சைவவித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவர் கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.
நூற்றாண்டு விழாவின் முதலாம் அமர்வு நாளை காலை-09 மணி முதல் பிற்பகல்-12.45 மணி வரையும், இரண்டாம் அமர்வு பிற்பகல்-02.30 மணி முதல் மாலை-05 மணி வரையும் இடம்பெறும்.
முதலாம் அமர்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதமவிருந்தினராகவும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் சிறப்பு விருந்தினராகவும், இரண்டாம் அமர்வில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி ஜெ.பொ.சுகந்தராஜ் பிரதம விருந்தினராகவும், திருநெல்வேலி ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமையாளர் வேலாயுதம் வசீகரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் "மாறிவரும் சமூகத்தில் சமயத்தின் வகிபாகம்" எனும் தலைப்பிலான கருத்தரங்கும், சைவச் சிறுவர் இல்லச் சிறுவர் சிறுமிகளின் பல்வேறு கலைநிகழ்வுகளும், கையேடு வெளியீடும் இடம்பெறும்.