செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 42 ஆவது ஆண்டு நிறைவு விழா

செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 42 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், வருடாந்தப் பொதுக் கூட்டமும் நாளை ஞாயிற்றுக்கிழமை (25.02.2024) காலை-08.30 மணி முதல் யாழ்ப்பாணம் கலட்டியில் அமைந்துள்ள மேற்படி நிறுவனத்தின் தலைமைக் காரியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.        

நிகழ்வில் வடமாகாணப் பிரதித் தபால்மா அதிபர் திருமதி.மதுமதி வசந்தகுமார், செவிப்புலன் றூட் அங்கத்தவர் விஜயகுமார் சியாமளா தம்பதிகள் பிரதம விருந்தினர்களாகவும், யாழ்.மாவட்டச் செயலக சமூக சேவைகள் திணைக்கள இணைப்பாளர் நடராசா ரதிகுமார், நல்லூர் பிரதேச செயலக சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.தர்மினி ரஜீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.