இணுவிலில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் நடந்த விபத்தில் அநியாயமாக உயிரிழந்த இளம் தொழிலதிபர் ஆனந்தராசா சயந்தன் ஞாபகார்த்த இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (31.03.2024) காலை-08.30 மணி தொடக்கம் இணுவில் இந்து விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் இணுவில் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.