குப்பிழான் காளி கோயில் கும்பாபிஷேக தின விசேட வழிபாடு நாளை

"காளி கோயில்" என அழைக்கப்படும் குப்பிழான் வடபத்திரகாளி அம்பாள் ஆலய கும்பாபிஷேக தின விசேட வழிபாடு நாளை சனிக்கிழமை (30.03.2024) முற்பகல்-10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

அபிஷேக, பூசை வழிபாடுகள், வசந்த மண்டபப் பூசை, திருவூஞ்சல் வழிபாடு என்பன இடம்பெற்றுத் தொடர்ந்து காளி அம்பாள் வீதி உலா வரும் திருக்காட்சியும் இடம்பெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.