குப்பிழானில் முதுபெரும் சோதிடர் ஐயம்பிள்ளைக்கு அஞ்சலி

சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கத்தின் ஐந்தாம் வருட நினைவு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (10.03.2024) மாலை யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில்  இடம்பெற்றது.

இறைவணக்கம், மலரஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து இன்று தனது 103 ஆவது வயதில் காலமான குப்பிழான் மண்ணின் முதுபெரும் சோதிடரும், ஓய்வுநிலை அதிபருமான பொன்னையா ஐயம்பிள்ளை ஐயாவுக்கு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைவரும் எழுந்துநின்று ஒருநிமிட மெளன அஞ்சலி செலுத்தினர்.

(செ.ரவிசாந்)