கலாநிதி.கலாமணியின் உருவச்சிலைத் திறப்பு விழாவும் அனுபவப் பகிர்வுகளும் நாளை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறையின் ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளரும்,   பன்முக ஆளுமை மிக்கவருமான கலாநிதி. தம்பிஐயா கலாமணியின் உருவச்சிலைத் திறப்பு விழாவும் அனுபவப் பகிர்வுகளும் நிகழ்வு நாளை திங்கட்கிழமை(11.03.2024) முற்பகல்-10 மணியளவில் அல்வாய் தெற்கில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் அ.பெளநந்தி தலைமையில் நடைபெறவுள்ளது.          

உருவச் சிலை திறப்பு நிகழ்வைத் தொடர்ந்து "பல்கலைக்கழகமாக கலாநிதி.த.கலாமணி" எனும் தலைப்பிலான நூல் வெளியீடும் அதனைத் தொடர்ந்து கருத்துப் பகிர்வுகளும் இடம்பெறுமென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.