சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கத்தின் ஐந்தாம் வருட நினைவு நிகழ்வு நாளை

 

மறைந்த சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கத்தின் ஐந்தாம் வருட நினைவு நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (10.03.2024) மாலை-03 மணி முதல் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் ஓய்வுநிலைக் கிராம அலுவலர் சோ.பரமநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் ஜே-210 கிராம அலுவலர் சி.சிவராம், குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத் தலைவர் ப.மயூரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவி திருமதி.சுதர்சன் அமிர்தகலா ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் கலந்து கொண்டு ஆசி உரை ஆற்றுவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.தி.செல்வமனோகரன் "ஈழத்துச் சித்தர் பரம்பரை" எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துவார். அத்துடன் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் அதிவிசேட சித்திபெற்ற குப்பிழானைச் சேர்ந்த மாணவர்கள் நிகழ்வில் வைத்துக் கெளரவிக்கப்படவுள்ளனர்.

(செ.ரவிசாந்)