கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச மகளிர் தினச் சிறப்பு நிகழ்வு

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் சர்வதேச மகளிர் தினச் சிறப்பு நிகழ்வு அண்மையில் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணக் கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசரும், கலாசாலையின் பழைய மாணவியுமான திருமதி.நளினி அகிலதாஸ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்வுகளைக் கணிதநெறி ஆசிரிய மாணவர் செல்வரட்ணம் சந்திரகுமார் நெறிப்படுத்தினார்.   ஆங்கிலநெறி ஆசிரிய மாணவி தினேஸ் கௌசியா ஆசிரிய மாணவர் உரையையும், முத்துக்குமாரு ஜெயக்குமாரி விரிவுரையாளர் உரையையும் ஆற்றினர். பிரதம விருந்தினருக்கான அறிமுகவுரையை விரிவுரையாளர் ரஜிதா சின்னத்துரை நிகழ்த்தியதுடன் பிரதம விருந்தினர் சிறப்புரையை நிகழ்த்தினார்.    

'கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பெண் கல்விக்கு வழங்கிய பங்களிப்பு' எனும் தலைப்பில்  கலாசாலையின் முதல்வர் எடுத்துக் கூறி நிறைவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் கலாசாலைச் சமூகத்தால் கெளரவிக்கப்பட்டார்.