கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பிக்கப்படவுள்ள மகா சிவராத்திரி உற்சவம்

ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் கீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வர சுவாமி ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (08.03.2024) மகா சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இன்று இரவு-08 மணியளவில் விசேட அபிஷேகம் பூசைகளுடன் ஆரம்பமாகித் தொடர்ந்து நான்கு சாமப் பூசைகளும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து நள்ளிரவு-12 மணிக்கு லிங்கோற்பவ காலச் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூசை வழிபாடுகளும், பஞ்சமுக அர்ச்சனை, யாக பூசையைத் தொடர்ந்து நாளை சனிக்கிழமை அதிகாலை-03 மணியளவில் இடபாரூடர் ஜோதி தரிசனக் காட்சியும் சிறப்பாக இடம்பெறுமெனவும், மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆலயச் சூழலில் சிறப்புக் கலை நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள் ளதாகவும் ஆலய நித்தியகுரு ந.இரங்கநாத சர்மா தெரிவித்தார். 

(செ.ரவிசாந்)