"காளி கோயில்" என அழைக்கப்படும் குப்பிழான் வடபத்திரகாளி அம்பாள் ஆலய கும்பாபிஷேக தின உற்சவம் நேற்றுச் சனிக்கிழமை (30.03.2024) முற்பகல் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.
நேற்று முற்பகல்-10 மணியளவில் கும்ப பூசை ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விசேட அபிஷேக, பூசைகள் இடம்பெற்றது. முற்பகல்-11.15 மணியளவில் வசந்தமண்டபப் பூசை, திருவூஞ்சல் வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து காளி அம்பாள் அடியவர்கள் புடைசூழ வீதி உலா வரும் திருக்காட்சியும் நடைபெற்றது.