இளவாலை வசந்தபுரத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல்

ஜே-221 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட இளவாலை வடக்கு வசந்தபுரம் பகுதிக்கான குழாய் மூலம் குடிநீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலும் குடிநீர்ப் பயன்பாட்டு மேற்பார்வைக் குழு அமைத்தலும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (02.04.2024)  மாலை-03.30 மணியளவில் வசந்தபுரம் கிராமச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் ஆர்வமுடையவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான தீர்மானமெடுத்தலிற்குத் தங்கள் பங்களிப்பினை வழங்குமாறு வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.