நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று திங்கட்கிழமை (01.04.2024) காலை-09.15 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பதினைந்து தினங்கள் இவ் ஆலய மஹோற்சவம் இடம்பெறவுள்ளது. எதிர்வரும்-10  திகதி புதன்கிழமை மஞ்சத் திருவிழாவும், 11 ஆம் திகதி கைலாசவாகனத் திருவிழாவும், 13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-08 மணியளவில் தேர்த் திருவிழாவும், 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09 மணியளவில் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளதாக மேற்படி ஆலய அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.