கொடியேற்றம் காண்கிறாள் குப்பிழான் நாயகி கன்னிமார் கெளரித் தாய்

குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும்-14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-11 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாகச் இவ் ஆலய உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ் ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு-07 மணியளவில் வசந்த உற்சவமும், 20 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-05 மணியளவில் வேட்டைத் திருவிழாவும், 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு-07 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 22 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்-10 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-11 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு கொடியிறக்க உற்சவமும் நடைபெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.  

இதேவேளை, மஹோற்சவ காலங்களில் வழமை போன்று தினமும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

(செ.ரவிசாந்)