சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும்-15 ஆம் திகதி திங்கட்கிழமையும் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
நாளை வியாழக்கிழமை முதல் சித்திரைப் புத்தாண்டு நன்னாளான எதிர்வரும் சனிக்கிழமை வரையான மூன்று தினங்களும் அரச விடுமுறையாகவுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாளாக காணப்படுகின்றது. இந்நிலையில் திங்கட்கிழமையும் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.