மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் பங்குனித் திங்கள் உற்சவத்தில் அம்மன் வடிவில் பறவைக் காவடி!

மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் ஆலய நான்காம் பங்குனித் திங்கள் உற்சவம் நேற்றுத் திங்கட்கிழமை (08.04.2024) சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது பல நூற்றுக்கணக்கான ஆண் அடியவர்கள் காவடிகள் எடுத்துத் தமது நேர்த்திக்  கடன்களை நேர்த்தியுடன் நிறைவு செய்தனர்.

அந்தவகையில் புத்தூர் கலைமதி கிராமத்தைச் சேர்ந்த இருவர் ஒன்றாகப் பறவைக் காவடி எடுத்து  வந்த நிலையில் அவர்களில் ஒரு இளம் குடும்பஸ்தர் அம்மன் வடிவில் வந்த காட்சி பலரினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்ததுடன் பக்திப் பரவசத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. 

(செ.ரவிசாந்)